யாழ் உயர்கல்விக் கண்காட்சி நேற்று (24) ஆரம்பமானது.
கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
யாழிலுள்ள தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சி இன்றும் (25) இடம்பெறவுள்ளது.
குறித்த கண்காட்சியை, காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.