T20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது வனிந்து ஹசரங்க நடந்து கொண்ட விதம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.