இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிகெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிராக அவர் இன்று அடுத்த சதத்தோடு சேர்த்து 10 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் 9 சதங்களும், ரிக்கி பாண்டிங் 8 சதங்களும், விவியன்ரிச்சர்ட்ஸ் 8 சதங்களும் அடித்துள்ளனர்.
இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும் என்பதும் ஆட்டம் இழக்காமல் இருக்கும் ஜோ ரூட் நாளையும் சிறப்பாக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது