ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை நயன்தாராவுக்கு ஷாருக்கான் வழங்கினார்.
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுகிறவர் தாதாசாகேப் பால்கே. இந்தியாவின் முதல் சினிமா அரிச்சந்திராவை அவர்தான் எடுத்தார். இந்திய சினிமாவில் சாதனைப் படைத்தவர்களுக்கு தாதாசாகேப் பால்கே பெயரில் இந்திய அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்திய திரைத்துறையினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச கௌரவமாக இந்த விருது கருதப்படுகிறது. இந்த விருதுக்கும் தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுக்கும் தொடர்பில்லை. இது தாதாசாகேப் பால்கே பெயரில் இந்திப் படங்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் விழாவில் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடந்த இந்த பிரமாண்ட விருது விழாவில், அட்லி இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானுக்கு, சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத்தும் தட்டி சென்றனர்.
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு அளிக்கப்பட்டது, இந்த விருதினை நடிகர் ஷாருக்கான் நயன்தாராவுக்கு வழங்கினார். அப்போது விருது வாங்க மேடைக்கு வந்த நயன்தாராவின் கைகளை பிடித்த ஷாருக்கான், ‘ஜவான்’ படத்தில் வரும் ‘சல்லேயா’ பாடலின் ஸ்டெப் ஒன்றை ஆடினார். மேலும் நயன்தாரவுக்கு விருதை வழங்கிய பின் அவர் நெற்றியில் முத்தமிட்டார் ஷாருக்கான்.