பெண்களை வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்மொழிவை மற்றும் திட்டங்களை தனக்கு உடனடியாக வழங்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்;டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் உயர் நிருவாகத்திற்கும், அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கத்திற்கும் நேற்று (20) அறிவித்துள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டு, அதிக சம்பளம் கிடைக்கும் பயிற்றப்பட்ட வேலைகளுக்கு மட்டுமே தொழிலாளர்களை அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, பத்து வருடங்களுக்குள் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு, குறித்த துறையில் உள்ள சகல தரப்பினரையும் இணைத்து இந்தப் பிரேரணையை தன்னிடம் சமர்ப்பிக்குமறு அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.