திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 140 பேருக்கு LDO Permit உம், 10 பேருக்கு Grand உம் நேற்று (19) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.