மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதை நோக்காக கொண்ட இப்பயிற்சி பாசறை கடந்த இரண்டு நாட்களாக இடம் பெற்றது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி நெறி தன்னாமுனை மியானி உள்ளக கூடைப்பந்தாட்ட அரங்கில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எந்திரி பார்த்தசாரதி தலைமையில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தேசிய கூடைப்பந்தாட்ட சம்ளேனம் ஆகியன இணைந்து மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்கும் மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டத்திற்கு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி பாசறையானது மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கூடைப்பந்தாட்ட விளையாட்டு நுணுக்கங்கள் மற்றும் அனுபவங்கள் பயிற்றுவிப்பாளர்களினால் பகிரப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு இதன் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.