3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பு.
இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அங்கு 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
T20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.