மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும், தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார்.
அத்துடன் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி அமைச்சர் ரமேஷ் பத்திரணவிற்கு கௌரவமும் அளிக்கப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சர்களான சிவ.சந்திரகாந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன உட்பட சுகாதார துறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.