கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு (17) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் வரவேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்டச்செயலக மாநாட்டுமண்டபத்தில் ஏற்பாடாகியிருந்த உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
இலங்கை இந்திய நட்புறவிறவின் கீழ் இந்திய அரசினால் வழங்கப்பட்ட இவ் உலருணவுப்பொதிகள் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு. ராகேஷ் நடராஜ் பாஸ்கர் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டச் செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி ஹ.சத்தியஜீவிதா அவர்களுடன் உத்தியோகத்தர்களும் இணைந்து மலர்மாலை அணிவித்து வரவேற்றிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வினூடே கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்ய ப்பட்ட 40 பயனாளிகளுக்கும், தலா 20 பயனாளிகள் வீதம் கண்டாவளை , பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என மொத்தமாக 100 பயனாளிகளுக்கு இலங்கை இந்திய நட்புறவிறவின் கீழ் உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.