இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரான ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா சமயத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் குறைவான உறவினர்களே கலந்து கொண்டனர். ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்த ஆறு மாதத்தில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இதனால், தம்பதிகளுக்குள் மனம் ஒத்துவராமல் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. மனம் உடைந்து போன ஐஸ்வர்யா, திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கழித்து சட்டப்படி விவாகரத்து கோரினார். பின்பு, ஐஸ்வர்யா தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு அப்பா வீட்டில் இருந்தார். இந்த விஷயம் வெளியில் கசிந்தபோது ஷங்கர் தரப்பு எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது. இப்போது ஐஸ்வர்யா இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகியுள்ளார்.
இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.