அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை நாளை (19) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 2023ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் தகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.