இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் நூலிழையில் சுப்மன் கில் சதத்தை தவறவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் சற்று முன் தொடங்கியது
இன்றைய போட்டியில் சுப்மன் கில் சூப்பராக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 91 ரன்கள் எடுத்த போது அவர் திடீரென ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து அவர் நூலிழையில் சதத்தை தவறவிட்டார். இருப்பினும் ஜெய்ஸ்வால் 141 ரன்கள் உடன் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இந்தியா தற்போது 431 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.