இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது.
நேற்று இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஸாக் க்ராவ்லி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் 500 ஆவது விக்கெட்டாகும். இந்திய அணியில் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை இதன் மூலம் அஸ்வின் படைத்தார்.
தற்போது அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பியுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது.