யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார்.
அங்கு மாவட்ட அபிவிருத்தி சார் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் நீர்வழங்கல் விவகாரம் சம்பந்தமாகவும் கருத்தாடல்கள் இடம்பெற்றன.
இதன்போது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்.மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், படையினர், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.