தாளையடி குடிநீர் திட்டம் ஊடாக வடக்கில் சுமார் 3 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர்..!!
தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உவர்நீர் குடிநீர் செயற்றிட்டத்தை பார்வையிடுவதற்காக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (16) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அங்கு நேரில் சென்ற அமைச்சர், பொறியியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இத்திட்டத்தை விரைவில் நிறைவுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாளையடி குடிநீர் திட்டம் ஊடாக வடக்கில் சுமார் 3 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறும் என்றும் அமைச்சர் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.