வெல்லஸ்ஸவிற்கு புது பொலிவை பெற்றுக்கொடுத்தல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தொழிலிற்கு கௌரவம் வழங்கும் கருசரு திட்டம் , இளைஞ்சர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் Smart Youth ஆகியன இணைந்து நடாத்தும் “இலங்கையை வெற்றிகொள்வோம்” நடமாடும் மக்கள் சேவை நிகழ்ச்சி வெல்லவாய பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (17) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரச அதிகாரிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள்,வர்த்தக சமூகம், இளைஞர்கள்,பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் இந்நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.