முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் 5 பேரை எதிர்வரும் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.