45 வயதில் இப்படி ஒரு போல்ட்டான காட்சியில் துணிவு பட நடிகை மஞ்சு வாரியர் – போஸ்டரை கண்டு மிரண்ட ரசிகர்கள்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழில் இவருக்கு சொல்லிகொல்லம்படி வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் செலக்டிவாக கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ஃபுட்டேஜ் (Footage) என்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படி இதில் வழக்கத்திற்கு மாறாக போல்டான படுக்கையறை காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார் மஞ்சு வாரியர். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நடிகையா இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது என்று மிரண்டு போய்யுள்ளனர்.