இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சர்பிராஸ் கான் அறிமுகமாகி இருக்கிறார். சர்பிராஸ் கான் அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்த நிலையில் சர்பிராஸ் கான் தன்னுடைய 26 ஆவது வயதில் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக சர்பிராஸ் கான் வாய்ப்புக்காக போராடிய நிலையில் தற்போது அது கிடைத்திருக்கும் இந்த தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் சர்பிராஸ் கானின் தந்தை ஒரு ஜெர்சி அணிந்திருந்தார். அதுதான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.