ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக ரஹமத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக பத்தும் நிஸ்ஸங்க 118 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குய்ஸ் அஹ்மத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியின் சிறந்த வீரர் விருதும் , தொடர் நாயகன் விருதும் பத்தும் நிஸ்ஸங்கவுக்கு வழங்கப்பட்டது.