‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது..!!

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது.

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய அல்பம் பாடல் “மாமாகுட்டிமா” புரோமோ வெளியாகியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை
சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.

‘முத்து முத்து கருவாயா’, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே’, ‘கண்ணத்தொறந்ததும் சாமி’ ஆகியவை அஸ்மின் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்த வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்’ பாடலும் இவர் எழுதியது தான்.

‘முத்து முத்து கருவாயா’ மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராப் பிரசாத் இயக்கியுள்ள இந்த அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டு வைத்தார்.

இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறும்போது.

காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது.மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின்
தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கெசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார் இது நான் பெற்ற பாக்கியம்.மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம் இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று கூறினார்.

MAMAKUTTYMA

SONG TEAM

PRODUCER – DR.UK MALAKUMAR
MUSIC DIRECTOR- SRIKANTH DEVA
SINGER- “THENISAI THENRAL” DEVA
LYRICST – POTTUVIL ASMIN
DOB AND SONG DIRECT BY
SAKTHI PRIYAN
EDITOR – BIJU V DON BOSCO
MASTER & MIXING – MUJEEB STUDIO
COLORIST- KIRUBARAJ PRINCE
PRO- NIKIL MURUGAN
PROJECT DESIGNER – RAPS PRASAATH
PUBLICITY DESIGN – SK PRAKASH

PROMO DIRECTOR
RAPS PRASAATH
DOB – MANISH TEAM

PRODUCED BY:

MALAKUMAR PADAIPPAGAM UK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *