நடிகை ஸ்னேஹா, நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். படங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் பார்த்தும் அவரை நாம் ரசித்து வருகிறோம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இன்னமும் குறையவில்லை. தற்போது விஜயின் GOAT படத்தில் ஸ்னேஹா நடித்து வருகிறார்.
மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகைதான் ஸ்னேஹா. இவர் மும்பையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். இவரது நிஜ பெயர் சுஹாசினி. நடிப்பு, சினிமா என ஒரு நாளும் நினைத்திடாத இவர் ஃபாசில் மற்றும் கலா மாஸ்டரின் ஊக்கத்தால் சினிமாவில் நடிக்க தொடங்கினார். நடன போட்டிக்காக சென்றிருந்தபோது நடிப்புக்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதன்பிறகு, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நாயகியாகவும் மாறினார். தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார். புன்னகை அரசி என சிறப்பு பெயரையும் பெற்றார். திரையுலகில் உச்சத்தில் இருந்த சமயத்தில் 2012ல் காதலர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.
ஸ்னேஹாவின் புடவைகளுக்கும் அவரது காஸ்ட்யூமையும் விரும்பாத பெண்களே இல்லை எனலாம். அதிலும், ஸ்னேஹாவின் புடவைக்கு பெண்கள் மத்தியில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். விருது நிகழ்ச்சிகளுக்கும், TV நிகழ்ச்சிகளுக்கு ஸ்னேஹா வருகிறார் என்றால் அவர் என்ன உடை அணிந்திருக்கிறார் என பார்க்கவே தனி கூட்டம் இருக்கிறது.
எதிர்பார்த்திடாத வகையில், தற்போது ஒரு புதிய தொழிலை தொடங்கியிருக்கிறார் ஸ்னேஹா. பட்டு சேலைகளுக்கான பிரத்யேக கடையை திறந்து வைத்திருக்கிறார் ஸ்னேஹா. சென்னை, திநகரில் ஸ்னேஹாலையா சில்க்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இவரது கடையில் சூப்பரான பட்டு சேலைகள் கிடைக்கும்.