கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிச் சென்ற பஸ்ஸும் பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோதி விபத்துக்குள்ளாகின. இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.