ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.