ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.
சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் விமான சேவை நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட சென்னை அணியின் புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர். சென்னை அணி வீரர்கள் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
2024 ஐபிஎல் தொடருக்கும் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரச்சின் ரவிந்திரா, ஷர்துல் தாகூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்ட வீரர்கள் சென்னை அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.