சசிகுமார், லிஜோ மோல் நடிக்கும் ‘ஃப்ரீடம்’ First Look வெளியீடு..

சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஃப்ரீடம்’ (Freedom) படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘கழுகு’, ‘கழுகு 2’, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவாவின் இயக்கத்தில் வெளியாக உள்ள அடுத்த படம் ‘ஃப்ரீடம்’ (Freedom). இப்படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *