ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது. முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.