இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இவர் தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘மங்கை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.