கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கான (SLGTI) விஜயமொன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இன்று (06.02.2024) மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், பௌதீகவியல் பேராசிரியரும், சிவானந்தன் ஆய்வக நிறுவுனரும் தலைவருமான சிவா. சிவானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
Mechanical Technology, Automotive & Agricultural Technology, Electrical & Electronic Technology, Construction Technology, Information & Communications Technology, Food Technology உள்ளிட்ட துறைகளுக்கான NVQ Level 4 – NVQ Level 6 வரையான கற்கைகள் இங்கு இடம்பெறுகின்றன.