பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தெரிவித்துள்ளது.
அண்மையில் வேறொரு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.
புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று (5 பிப்ரவரி) தொடங்கியதாய் அரண்மனை சொன்னது.
சிகிச்சைகளின் போது அவரின் பொதுக் கடைமைகள் ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.