விஷ்ணு விஷாலை வைத்து FIR எனு அட்டகாசமான அண்டர்கவர் ஏஜென்ட் படத்தை கொடுத்த இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் தான் அடுத்து ஆர்யா நடித்து வருகிறார். மிஸ்டர் எக்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார், கெளதம் கார்த்திக், அதுல்யா ரவி, அனகா, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சார்பட்டா பரம்பரை படத்திற்காக டிஎம்டி முறுக்கு கம்பி போல தனது உடம்பை வொர்க்கவுட் செய்து முரட்டுத்தனமாக மாற்றிய ஆர்யா மீண்டும் இந்த படத்திற்காக தனது உடம்பை வேற லெவலுக்கு மாற்றி வருகிறார். அதற்காக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார்.
சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியான படங்கள் எல்லாமே தோல்வியடைந்து வருகின்றன. கடினமாக உழைப்பை கொட்டி நடித்தாலும் ஆர்யாவுக்கு சரியான படங்கள் அமையாமல் போய் விட்டன. கேப்டன், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் கடைசியாக வெளியாகி ஃபிளாப் ஆன நிலையில், சமீபத்தில் ஆர்யாவின் ஓடிடி வெப்சீரிஸான தி வில்லேஜ் வெப்சீரிஸும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸராக ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்துக்காக கடைசியாக முரட்டுத்தனமான வொர்க்கவுட் செய்திருந்தார். அதன் பின்னர் சார்பட்டா 2 படம் தான் உருவாகப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். அதற்காக வெறித்தனமாக ஜிம்மில் டிசர்ட்டை மேலே தூக்கிக் கொண்டு சிக்ஸ் பேக் தெரியும் அளவுக்கு முரட்டுத்தனமாக தனது உடம்பை மாற்றி வருகிறார் ஆர்யா.
விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கெளதம் மேனன் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் திரைப்படமே வித்தியாசமான திரைக்கதையுடன் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் பார்க்கும் அளவுக்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அடுத்து மஞ்சிமா மோகனுக்கு பதில் அவரது கணவர் கெளதம் கார்த்திக், மீண்டும் இந்த படத்திலும் ரைசா வில்சன், கெளதம் மேனனுக்கு பதிலாக சரத்குமார் மற்றும் ஆர்யா என பக்காவான ஸ்கெட்ச் உடன் மிஸ்டர் எக்ஸ் படத்தை மனு ஆனந்த் உருவாக்கி வருகிறார்.