ஊருக்காக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்திற்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்தாலும் அவரின் ரியல் ரசிகையான மனைவி பிரேமலதா விஜயகாந்திற்காக செய்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழகத்தின் சினிமா வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாத ஒரு ஆளுமையாக வாழ்ந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் அரசியலிலும், சினிமாவிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தவர்.
தொடர்ந்து வருட கணக்கில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள், பொதுக்குழு கூட்டத்தின் போது தொண்டர்களை சந்திப்பது வழக்கம். இவரின் இழப்பு ஒட்டு மொத்த தமிழகத்திற்கு பேரதிர்ச்சியை அளித்தது. தொடர்ந்து இவரின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நடத்தி வந்த தேமுதிக கட்சியின் புதிய தலைவராக விஜயகாந்த் அவர்களுடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக பல பிரபலங்கள் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் செய்திருக்கிறார். இது குறித்த காணொளி ஒன்றை அவரது மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கணவர் விஜயகாந்த் உருவத்தை வலது கையில் டாட்டூ குத்தியுள்ளார் பிரேமலதா. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.