இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது இரும்புச்சத்து நிறைந்த இந்த முருங்கை கீரையை வைத்து எவ்வாறு இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவையான சட்னி செய்யலாம் என்று தான்…
தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஆரோக்கியமான உணவுகளையே நாம் பெரும்பாலும் சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கபடுகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள உணவு பழக்க முறைகளே. எனவே தற்போதெல்லாம் நாம் ஆரோக்கியமான உணவுகளையே தேடி உண்ணுகிறோம்.
அப்படி ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்றுதான் ‘முருங்கை’. முருங்கை மரத்தை பொறுத்த வரை அதன் அனைத்து பகுதிகளும் நமக்கு சத்து நிறைந்ததாகவும், ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறையை சரிசெய்ய உதவும் ‘முருங்கை கீரை’ தான்.
நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது இரும்புச்சத்து நிறைந்த இந்த முருங்கை கீரையை வைத்து எவ்வாறு இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவையான சட்னி செய்யலாம் என்று தான்…
தேவையான பொருட்கள் :
- முருங்கை கீரை
- சின்ன வெங்காயம் – 25
- காய்ந்த சிகப்பு மிளகாய் – 8
- பூண்டு – 15 பல்
- கடலை பருப்பு – 1 கப்
- வெள்ளை உளுந்து – 1 கப்
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- பெருங்காய தூள் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை :
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை :
முதலில் உருவி வைத்துள்ள முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, கறிவேப்பில்லை, பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.
பிறகு அதனுடன் புளி, சுவைக்கேற்ப உப்பு, அலசி வைத்துள்ள முருங்கை கீரை, பெருங்காய தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
வதக்கிய அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
தாளிப்பு தயார் ஆனதும் அதை அரைத்து வைத்துள்ள முருங்கை கீரை சட்னியில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அவ்வளவுதான் தோசை, இட்லிக்கு ஏற்ற சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ‘முருங்கை கீரை சட்னி’ ரெடி…