இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே 3000 உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சு அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.