இலங்கையின் சுதந்திர தின நாளில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.புஸ்பகுமார தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான விசேட செயலமர்வொன்று இடம்பெற்றது .
பாடசாலை பகுதியில் மதுபான விற்பனை,போதை மாத்திரை, வாசனைப்பாக்கு, புகையிலை, மூக்குப்பொடி, மற்றும் ஆயுர்வேத குழிகள் விற்பனை என்பவற்றை தடை செய்வது குறித்தும், அவற்றால் ஏட்படும் தீங்குகள் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அவ்வாறு விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துடன் மாணவர்கள் இடையே போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து ஏற்படும் அபாயமும் எடுத்துக்கூறப்பட்டது.
மஸ்கெலியா பீ, எம், டி, கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உட்பட நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.