76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரெத்தா தாவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.