நடிகர் விஜய்யின் புதிய கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12.30 -1:30 மணிக்குள் அறிவிக்கப்பட உள்ளது என தகவல்!
அண்ணன் ரெடி..போஸ்டர் அடி… விஜயின் அரசியல் கட்சி குறித்த புதிய அப்டேட்
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலில் ஈடுபடும் முயற்சியில் உள்ளார். அதற்கான விஜய் மக்கள் இயக்க பொதுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சியின் தலைவராகவும் விஜய் தேர்ந்தெடுக்கபட்டார். நடிகர் விஜயின் அரசியல் கட்சி பதிவு செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
இதனால் எந்த நிமிடத்திலும் விஜய் தன்னுடைய கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜயின் அரசியல் கட்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி அறிவிப்பு குறித்த செய்திக்காக தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிப்பு வெளியாகும் சமயத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட விஜய் மக்கள் இயக்கத்தினர் தயாராகிவிட்டனர்.