ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9 -ம் தேதி வெளியாகவுள்ளது.முக்கிய கதாபாத்திரத்தில் நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஹிந்தி மொழி டப்பிங் ரைட்ஸ் மட்டும் ரூபாய் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.