சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா என பிரபலங்கள் சிலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.
அப்படி இப்போது வெள்ளித்திரையில் இந்த ஜோடி நிஜத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.
அண்மையில் ராஷ்மிகா ஓரு பேட்டி கொடுத்துள்ளார்.
என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன்.
நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் இல்லை, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் முக்கிய நபராக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.