அம்பாறை கரையோரத்தில் சிக்கும் 5 – 25 கிலோ வரை கணையான் மீன்கள்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் கணையான் வகை மீன்கள் கரைவலைகள், கட்டுவலைகள், தூண்டில்கள் மூலம் பிடிக்கப்பட்டு பல ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.சுமார் 5 முதல் 25 கிலோ எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.
இவ்வகையான மீன்கள் ரூபா 1,000 முதல் 9,000 வரை விற்பனையாகி வருவதுடன், பொதுமக்களும் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.