மஸ்கெலியாவில் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இன்று 01.02.2024.காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டகாரர்கள் இன்று நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய படி எமக்கு 1700/= வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றது.


பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *