U19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தர்ம அடி வாங்கி நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது.
U19 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் சிக்ஸ் சுற்று துவங்கியது. அதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய முஷீர் கான் அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். கடந்த போட்டியில் அவர் சதம் அடித்து இருந்ததால் மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து கூட்டணி அமைத்து ஆடினர். அந்த திட்டம் வெற்றி பெற்றது.
முஷீர் கான் அபார ஆட்டம் ஆடி 126 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். கேப்டன் உதய் சாகரன் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்த போதும் முஷீர் கான் அடித்த சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.
அடுத்து நியூசிலாந்து அணி 296 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பேட்டிங் ஆடியது. அந்த அணி வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முன் நிற்க முடியவில்லை. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டாம் ஜோன்ஸ் முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆகி விக்கெட்டை இழந்தார். அதே முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் மூன்றாம் வரிசை வீரர் ஸ்னேஹித் ரெட்டி (நியூசிலாந்து வீரர் தாங்க..) டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நிற்கவில்லை. 28.1 ஓவரில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து அணி ஆல் – அவுட் ஆனது. இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அடுத்ததாக சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேபாள அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என கருதப்படுவதால் இந்திய அணி 2024
அடுத்து வந்த வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நிற்கவில்லை. 28.1 ஓவரில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து அணி ஆல் – அவுட் ஆனது. இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அடுத்ததாக சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேபாள அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என கருதப்படுவதால் இந்திய அணி 2024 அண்டர் 19 உலகக்கோப்பை அரை இறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.