ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவரும், நாட்டின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமனப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி,

இராசையா விக்டர் ராஜ் – வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை அமைப்பாளர்.

G.P நீல் சாந்த – வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபை அமைப்பாளர்.

ஸ்ரீராம் ரஜிதன் – வவுனியா வடக்கு பிரதேச சபை அமைப்பாளர்.

சிதம்பரசேகரம் அச்சுதன் – வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை அமைப்பாளர்

ஆகியோருக்கான நியமனங்கள் கட்சியின் பிரதி தலைவரும் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பரிந்துரைக்கமைய வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ சாரதி துஸ்மந்த அவர்களும், கட்சியின் பிரதித்தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *