நடிகர் தனுஷ் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, தெலுங்கில் வெளியானது. இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.