நடிகர் விஜய் , தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
இன்னும் ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி இருந்தது. அதனால் “த என்ற ஹாஸ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என ஒரு தகவல் X தளத்தில் தீயாக பரவி வருகிறது.
இருப்பினும் இது பற்றி உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் இது உறுதியாகும்.