இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (29.01.2024)சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.