கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி 15 முதல் ஆரம்பமாகவுள்ளது.குறித்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை 15, 2024 பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
மேலும், இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் ,ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய், இலங்கை ரூபாவாக 26 ஆயிரம் அறவிடப்படவுள்ளது.