2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெடின் சிறந்த வீராங்கனையாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் வெளிக்காட்டிய திறமைகளை கருத்தில் கொண்டே இந்த விருதுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களை பெற்றுள்ளார்.