இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி கொழும்பில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று (25.01.2024) மாலை இலங்கையில் காலமானார்.
இந்நிலையில், 47 வயதான பவதாரணி புற்று நோய் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ள உடல்
இவ்வாறு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இன்றைய தினம் கொழும்பிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.